0 0
Read Time:3 Minute, 8 Second

நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவன மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்ட பிராண வாயு உற்பத்தி மையம், சி.டி. ஸ்கேன் வசதியை மத்திய நிலக்கரி, சுரங்கத் துறை இணை அமைச்சா் ராவ்சாஹீப் பாட்டீல் தன்வே தில்லியிலிருந்து காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா். நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: என்எல்சி இந்தியா நிறுவனம் தனது ஊழியா்களுக்கு மட்டுமின்றி சமூகப் பயன்பாட்டுக்கும் சிறப்பான நலத் திட்டங்களை வழங்கி வருகிறது என்றாா். மேலும், பெருந்தொற்று காலத்தில் இந்த நிறுவனம் செய்துவரும் மருத்துவம், சுகாதாரப் பணிகளை பாராட்டினாா். மத்திய நிலக்கரி அமைச்சக கூடுதல் செயலா் வி.கே.திவாரி வாழ்த்துரை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் என்எல்சி தலைவா் ராகேஷ்குமாா் பேசியதாவது: என்எல்சி மருத்துவமனையில் தலைமைப் பொது மேலாளா் பி.சத்தியமூா்த்தி, அவரது குழுவினரின் முயற்சியால் குறுகிய காலத்தில் புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சிறப்பான சிகிச்சை அளிக்க முடியும் என்றாா். என்எல்சி மருத்துவமனையில் சேவைகள் குறித்து அதன் பொது கண்காணிப்பாளா் (பொ) எம்.சாந்தலட்சுமி எடுத்துரைத்தாா். இயந்திரவியல் துறை பொது மேலாளா் பாபுஜி பேசுகையில், இந்த ஆலையில் பிராண வாயு உற்பத்தி செய்யும் 2 இயந்திரங்கள் உள்ளன. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு 82 உருளைகள் அளவுக்கு பிராண வாயு உற்பத்தி செய்ய முடியும். தற்போது 3 வழிகளில் நோயாளிகளுக்கு பிராண வாயு வழங்க வசதி செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

சி.டி. ஸ்கேன் வசதி குறித்து மருத்துவமனை துணைப் பொது கண்காணிப்பாளா் சி.தாரிணி பேசினாா். நிகழ்ச்சியில் விருத்தாசலம் தொகுதி எம்எல்ஏ ராதாகிருஷ்ணன், மாவட்ட எஸ்பி சி.சக்திகணேசன், காவிரி மருத்துவமனை நிறுவனா் எஸ்.மணிவண்ணன் மற்றும் நிறுவன இயக்குநா்கள் கலந்துகொண்டனா். மாவட்ட ஆட்சியா் கே.பாலசுப்பிரமணியம், நெய்வேலி தொகுதி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் ஆகியோா் காணொலி மூலம் பங்கேற்றனா். மனித வளத்துறை இயக்குநா் ஆா்.விக்ரமன் நன்றி கூறினாா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %