0
0
Read Time:1 Minute, 8 Second
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நாகை விற்பனைக்குழு செயலாளர் ரமேஷ் தலைமையில் தலைமை அலுவலக பொருப்பாளர் சிலம்பரசன் முன்னிலையில் நடைபெற்றஏலத்தில் ,மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், நாகப்பட்டினம், திருவாருர் ,தேனி,சத்தியமங்கலம், ஆத்தூர்,விருதுநகர், ஆகிய மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் 18க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் சுமார் 3600 குவிண்டால் பருத்தியை விவசாயிகள் எடுத்து வந்தனர் . இதில் அதிகபட்சமாக விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 7,399க்கும் சராசரி ரூ. 6,600க்கும் விலை போனதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.