0
0
Read Time:1 Minute, 15 Second
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே மேல் புவனகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பின்னலூர் ஊராட்சியில் அண்மையில் தீ விபத்தால் செல்வராஜ் மற்றும் ராமச்சந்திரன் குடும்பத்தினர் பாதிப்படைந்தனர். இதுப்பற்றிய தகவல் அறிந்த புவனகிரி அதிமுக எம்எல்ஏ,கடலூர் மேற்கு மாவட்ட செயலாளருமான அருண்மொழித்தேவன் நேரில் சென்று ஆறுதல் கூறி அரிசி,உடை உள்ளிட்ட நிவாரணங்களை வழங்கினார். இதில் புவனகிரி ஒன்றிய பெருந்தலைவர், புவனகிரி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சி.என். சிவப்பிரகாசம், அவைத்தலைவர் முருகுமணி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், அதிமுக ஜெயசீலன், கடலூர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பபிரிவு தலைவர் புருஷோத்தமன் அண்ணாதுரை மற்றும் அதிமுக கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.