0 0
Read Time:3 Minute, 2 Second

என்எல்சி நிறுவன காலிப் பணி யிடங்களை என்எல்சி ஊழியர்கள் மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டே நிரப்ப வேண்டும் என என்எல்சி இதர பிற்படுத்தப்பட்டோர் நலச்சங் கத்தினர் வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

என்எல்சி இதர பிற்படுத்தப் பட்டோர் நலச் சங்கத்தின் நிர்வாகிகளான வி.என்.புருஷோத்தமன், அழகுராஜ், கணேசன், பாலாஜிஆகியோர் நேற்று என்எல்சி இந்தியா நிறுவன மனிதவளத்துறை இயக்குநர் ஆர்.விக்ரமனை சந் தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அதில் என்எல்சி நிறுவனத்தின் பணியிடங்களில் பல இடங்கள் காலிப் பணியிடங்களாகவே நீடித்து வருகிறது. அவ்விடங்களை நிரப்பும் வகையில் என்எல்சி ஊழியர்களின் குடும்பத்தில் ஒருவருக்கும், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தஇளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பை வழங்க வேண்டும், என்எல்சி நிறுவனம் உருவாக காரணமாக இருந்த ஜம்புலிங்க முதலியாரின் பிறந்த நாளை சம்பளத்துடன் கூறிய விடுப்பு நாளாக அறிவித்து, சுரங்கம் மற்றும் அனல்மின் நிலைய உணவகங்களில் இலவச உணவு வழங்கவேண்டும்.

கடலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு கொள்ளுக்காரன் குட்டைப் பகுதியில் மணிமண்டபம் கட்டித் தரவேண்டும், நெய்வேலிவட்டம் 29 முதல் மந்தாரக்குப்பம் வரையிலான சாலை மிகவும் சேதமடைந்த நிலையில் இருப்பதால் அதனை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும், என்எல்சி நிறுவனத் தில் பணியாற்றி ஓய்வுபெற்ற வர்களுக்கு வருடந்தோறும் வழங்கப்படும் மருத்துவ உதவித் தொகையை பாரபட்சமின்றி அனைவருக்கும் ஒரே மாதிரியாக வழங்க வேண்டும், கரோனா தாக்கத்தால் உயிரிழக்கும் என்எல்சி ஊழியர்களின் வாரிசுகளுக்கு இழப்பீடும் வேலைவாய்ப்பும் வழங்கிடவேண்டும் உள்ளிட்ட 15 கோரிக்கைகள் முன்வைத்து இந்த மனுவை வழங்கியுள்ளனர்.

என்எல்சி நிறுவனத்தின் பணியிடங்களில் பல இடங்கள் காலிப் பணியிடங்களாகவே நீடித்து வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %