0 0
Read Time:1 Minute, 39 Second

மயிலாடுதுறை ஜோதி பவுண்டேசன் சார்பில், கடந்த நான்கு ஆண்டுகளாக மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும், சாலை ஓரங்களில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் முதியோர்களுக்கு தினமும் உணவு வழங்கி வருகிறது.

இந்நிலையில் ஜோதி பவுண்டேஷன் ஐந்தாம் ஆண்டு துவக்க விழா, மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோயில் சரஸ்வதி மஹாலில் நடைபெற்றது.

இவ்விழாவில் ஜோதி பவுண்டேஷன் நிறுவனர் ஜோதி ராஜன், தலைவர் சேகர்,செயலாளர் மணிகண்டன், பொருளாளர் செந்தில்நாதன், ராஜரத்தினம், பழனிச்சாமி மற்றும் பக்கிரிசாமி, வினோத்குமார் ஆகியோர் முன்னிலையில், வைத்தீஸ்வரன்கோவில் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 70க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும், பொதுமக்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

மேலும் இந்நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் சரவணன், பழனிச்சாமி, வினோத்குமார், மூவலூர் சந்துரு மற்றும் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %