சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது நிகழ்ச்சியில் அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் 4 மாவட்ட கல்லூரிகளை நினைத்ததற்கு வரவேற்பு தெரிவித்தனர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அதில் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது அப்போது பல்கலைக்கழக நிர்வாகம் நிதி நெருக்கடியில் இருந்ததால் ஆசிரியர்களுக்கு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலையில் தற்போது திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதும் எங்கள் ஊழியர் சங்கத்தின் சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
இதனை ஏற்று கடலூர் மயிலாடுதுறை விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரிகளை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது இந்த அறிவிப்புக்கு ஊழியர் சங்கம் நன்றி தெரிவித்து வரவேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் மனோகர் பொதுச் செயலாளர் பழனிவேல் பொருளாளர் தவச்செல்வன் இணை பொதுச் செயலாளர் புண்ணியமூர்த்தி இணைப் பொருளாளர் இளஞ்செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.