0 0
Read Time:2 Minute, 46 Second

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மாத்தூர் மற்றும் முக்கரும்பூர் ஊராட்சிகளில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நாகை மாவட்ட வடக்கு திமுக பொறுப்பாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் தொடங்கி வைத்து பேசினார்.

தமிழகத்தில் தற்பொழுது கொரோனா தொற்று 2 வது அலை அதிகரித்து வருவதால் தமிழக அரசின் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதனை தொடர்ந்து மாத்தூர் மற்றும் முக்கரும்பூர் ஊராட்சிகளை சுற்றுப்பகுதிகளில் பொதுமக்களுக்கு 18 வயது முதல் 44 வயது வரை மற்றும் 44 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தனித்தனியே கொரோனா தடுப்பூசி முகாம் போடப்பட்டது. இந்த முகாமில் பொதுமக்கள் சுமார் 1000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னர் பேசிய பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் கொரோனா தடுப்பூசி குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என்று பொதுமக்களிடம் விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதில் செம்பை ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக், துணை பெருந்தலைவர் மைனர் பாஸ்கர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்எம் சித்திக், வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திக் சந்திரகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மஞ்சுளா, திருமலைக்கண்ணன், சுகாதார மேற்பார்வையாளர்கள் ராதாகிருஷ்ணன், வெங்கடேசன், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் புவனேஸ்வரி, ஊராட்சி மன்ற தலைவர்கள் குமார் என்கின்ற ஜெயக்குமார், ராஜலிங்கம், மயிலாடுதுறை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %