மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஜோதி பவுண்டேஷன் கடந்த நான்கு ஆண்டுகளாக ஏழை, எளிய மக்களுக்கு தினமும் உணவும், நலத்திட்ட உதவிகளும் வழங்கி வருகிறது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம்,சீர்காழி தாலுக்கா காரைமேடு ஊராட்சி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் ஜோதி பவுண்டேஷன் ஐந்தாம் ஆண்டு துவக்க விழா மற்றும் வருகின்ற டாக்டர். ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, ஜோதி பவுண்டேஷன் நிறுவனர் ஜோதி ராஜன் மாணவ மாணவிகளுக்கு நோட்டு, பேனா மற்றும் மரக்கன்றுகள் வழங்கினார்.
இவ்விழாவிற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் அய்யாறு தலைமையும், ஜோதி பவுண்டேஷன் தலைவர் சேகர் முன்னிலையும், சிறப்பு அழைப்பாளராக ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் கனிமொழி, செந்தாமரை ஆகியோர் கலந்து கொண்டு டாக்டர். ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்கள் கண்ட லட்சிய கனவுகளையும், பள்ளி பருவத்தில் கடைபிடிக்க வேண்டிய வாழ்வியல் நெறிமுறைகளையும் மாணவர்களிடையே எடுத்துக்கூறி ஊக்கப்படுத்தினர்.
மேலும் இந்நிகழ்ச்சியில், ஜோதி பவுண்டேஷன் பொருளாளர் செந்தூர் செந்தில், செயலாளர் மணிகண்டன், உறுப்பினர்கள் கார்த்தி,பழனிச்சாமி மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.