Read Time:1 Minute, 4 Second
சார்பட்டா படத்தில் வரும் டான்சிங் ரோஸ் தான் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் என சமூக வலைதளங்களில் பரவி வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் தரமற்ற முககவசங்களை வழங்கப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறினார்.
சார்பட்டா பரம்பரை படத்தில் விடுபட்ட காட்சி என, ஜெயக்குமார் பாக்ஸிங் செய்வது போல் ஒரு வீடியோ வெளிவந்து இருப்பதாகவும், சார்பட்டா படத்தில் வரும் டான்சிங் ரோஸ் தான் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் என சமூக வலைதளங்களில் பரவி வருவதாகவும் மா.சுப்பிரமணியன் பதிலளித்தார்.