0 0
Read Time:1 Minute, 40 Second

B.E., http://B.Tech., படிப்புகளில் சேருவதற்கும் நாளை முதல் விண்ணப்ப பதிவு தொடங்குகிறது. http://tneaonline.org இணையதளத்தில் நாளை முதல் ஆகஸ்ட் 24 வரை விண்ணப்பிக்கலாம்!

JUSTIN | http://tngasa.org & http://tngasa.in என்ற இணையதளங்களில் நாளை முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக் கல்வி இயக்குநர் பூரணசந்திரன் அறிவிப்பு.

தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் (Directorate Of Techinical Education- ‘DOTE’) இன்று (25/07/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் பி.இ., பி.டெக். போன்ற பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு நாளை (26/07/2021) முதல் தொடங்குகிறது. பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் நாளை முதல் ஆகஸ்ட் 24- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் ஆகஸ்ட் 25- ஆம் தேதியும், தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 4- ஆம் தேதியும் வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து, செப்டம்பர் 7- ஆம் தேதி முதல் அக்டோபர் 4- ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும். அக்டோபர் 12- ஆம் தேதி முதல் 16- ஆம் தேதி வரை துணை கலந்தாய்வு நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
100 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %