0
0
Read Time:50 Second
பழம்பெரும் நடிகை ஜெயந்தி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 76.தமிழ்,
கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஜெயந்தி. தமிழில் எதிர் நீச்சல், இருகோடுகள், பாமாவிஜயம், கண்ணா நலமா போன்ற படங்களில் நடித்த அவர், ஜெமினி கணேசனுடன் அதிக படங்களில் நடித்துள்ளார்.
உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகை ஜெயந்தி சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.