மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் 20 மீனவ கிராமங்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இரண்டு மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.
அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலை மற்றும் அதிவேக இயந்திர படகு பயன்பாடுகளை முற்றிலும் தடைசெய்வது எனவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மடவாமேடு, பூம்புகார், திருமுல்லைவாசல், சந்திரபாடி உள்ளிட்ட 14 மீனவ கிராமத்திற்கு கடும் கண்டனம் தெரிவிப்பது.
சிறு தொழில்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள அரசை வலியுறுத்துவது, அரசின் நடவடிக்கையால் சிறு தொழில்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டால் மூன்று மாவட்ட மீனவர்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவது. எனவும் தீர்மானம் நிறைவேற்றினர். மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 20 மீனவ கிராம தலைவர்கள், பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
நிருபர்: யோகுதாஸ்,மயிலாடுதுறை.