0
0
Read Time:1 Minute, 19 Second
துப்பாக்கிச் சுடுதல் 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதிச்சுற்று வாய்ப்பை இந்திய அணி இழந்தது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவு துப்பாக்கிச் சுடுதல் போட்டி இன்று காலை நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் மனு பாக்கர் – சவுரப் சவுத்ரி மற்றும் யசஷ்வினி தேஸ்வால் – அபிஷேக் வர்மா இணை பங்கேற்றனர்.
இதில் முதல் தகுதிச்சுற்றில் மனு பாக்கர், சவுரப் சவுத்ரி இணை வெற்றி பெற்று 2வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது. யசஷ்வினி தேஸ்வால் – அபிஷேக் வர்மா இணை தோல்வியடைந்து வெளியேறியது. இதையடுத்து நடைபெற்ற 2வது தகுதிச்சுற்றில் மனு பாக்கர், சவுரப் சவுத்ரி தோல்வியடைந்து இறுதிச்சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. இதனால், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு பறிபோனது.