0 0
Read Time:2 Minute, 6 Second

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே நரசிங்கநத்தம் ஊராட்சியில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எம்எல்ஏ நிவேதா முருகன் செவ்வாய்க்கிழமை நிவாரண உதவிகள் வழங்கினார்.

நர்சிங்கநத்தம் ஊராட்சிக்கு தெருவை சேர்ந்தவர் வீரசெல்வன் (56) மனைவி மணிமேகலை இவர்களது கூறைவீடு திங்கள்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் முழுவதும் எரிந்து தீக்கிரையானது இதில் வீட்டிலிருந்த ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு அட்டை மற்றும் ரூ.12 ஆயிரம் பணம் வீட்டில் இருந்த அத்தியாவசிய பொருட்கள் ஆகியவை எரிந்து சாம்பலாயின.

தகவலறிந்த பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் நேரில் சென்று பார்வையிட்டு தனது சொந்த நிதியில் ரூ.5 ஆயிரமும் அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார். இதேபோல் அரசின் நிவாரண உதவியாக ரூ.5 ஆயிரம், வேஷ்டி, புடவை, அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.

இதில் தரங்கம்பாடி வட்டாட்சியர் ஹரிதரன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் சித்திக், நாகை வடக்கு மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், செம்பனார்கோவில் ஒன்றிய குழு பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக், தகவல் தொழில் நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் ஸ்ரீதர் ஆகியோர் உடனிருந்தனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %