0 0
Read Time:1 Minute, 51 Second

சிதம்பரம் நகர பகுதியில் தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி, கீழ வீதி என நான்கு முக்கிய வீதிகள் உள்ளன. இங்குள்ள சாலை மற்றும் நடைபாதையை பலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்து வியாபாரம் செய்து வந்தனர். இதனால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்ததால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்தனர்.

 இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் நேற்று நகராட்சி பொறியாளர் மகாராஜன் தலைமையில் நெடுஞ்சாலை துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் சிதம்பரத்தின் நான்கு வீதிகளிலும் உள்ள நடைபாதை மற்றும் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகள், விளம்பர பேனர்கள் உள்ளிட்டவற்றை பொக்லைன் எந்திரம் மூலம் அதிரடியாக அகற்றினர்.

 அப்போது நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கார்த்தி, நகராட்சி இளநிலை பொறியாளர் செந்தில்குமார், நகராட்சி மின் கண்காணிப்பாளர் சலீம் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். ஆக்கிரமிப்பு அகற்றும்போது அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க சிதம்பரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் முருகன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %