சமூக இடைவெளியோடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட கட்சி அலுவலகத்தில் போட்ட வட்டத்தில் நிற்காமல், கட்சி நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து வட்டம் போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட கடலூர் அதிமுக-வினரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
திமுக அரசைக் கண்டித்து கடலூர் பாதிரிகுப்பம் பகுதியில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் முன்னாள் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் 100 க்கு மேற்பபட்ட அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
முன்னதாக சமூக இடைவெளியோடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட கட்சி அலுவலகத்தில் வட்டம் போடப்பட்டது. ஆனால் போட்டப்பட்ட வட்டத்தில் நின்ற்காமல் கட்சி நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து சமுக இடைவெளி இல்லாமல் அவர்கள் வட்டம் போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.