0 0
Read Time:1 Minute, 41 Second

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாலங்காடு மெயின் ரோட்டை சேர்ந்த வெங்கடேசன் கார்த்திக் ஆகியோரின் கூரை வீடுகள் தீப்பிடித்து எரிந்து தீக்கிரையானது மேலும் இவர்களின் வீட்டில் எரிந்த தீ பரவி எதிரே இருந்த சுரேஷ் என்பவரின் கூரை வீடு பாதியளவு எரிந்து சேதமானது. இதில் வெங்கடேஷ் என்பவர் இருசக்கர வாகனம் இரு வீட்டில் இருந்த வீட்டு உபயோக பொருட்கள் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. தகவல் அறிந்த பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்கினர். இந்த நிகழ்வில் குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சித்திக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %