3
0
Read Time:51 Second
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கொண்டல் ஊராட்சியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி பல வருடங்களாக சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகினர். பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லையென அப்பகுதி மக்கள் குற்றம்சாற்றி வருகின்றனர். மேலும் பள்ளி திறப்பிற்கு முன் பள்ளியை சீரமைத்து தர வேண்டுமென அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.