0 0
Read Time:2 Minute, 7 Second

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 57 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் 100 நாள் வேலை திட்ட பணிகளை கண்காணிப்பதற்காக ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு வாரத்துக்கு ஒரு பணித்தள பொறுப்பாளர் வீதம் 200 க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளாக இவர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் இவர்களை பணி நீக்கம் செய்து ஒன்றிய ஆணையர் உத்தரவிட்டுள்ளார். முதல் கட்டமாக சேந்தமங்கலம், கூடலூர் ஆகிய ஊராட்சிகளை சார்ந்த 7 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டு, அதற்கு பதிலாக திமுகவை சேர்ந்தவர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

உடல் ஊனமுற்றோர் மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர், விதவைகள் பணிபுரிந்து வரும் நிலையில் திமுக மேலிட அழுத்தம் காரணமாக 10 ஆண்டுகளாக பணி புரிந்தவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்கள் பொதுமக்களுடன் இணைந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த செம்பனார்கோவில் காவல்துறையினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர். அதிகாரிகள் தங்களின் கோரிக்கைகளை ஏற்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அவர்கள் தெரிவித்தனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %