0 0
Read Time:2 Minute, 27 Second

கடலூர் மாவட்டஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மக்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமை சம்பவங்களை முழுமையாக கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றம் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்ட கண்காணிப்புக் குழுவில் விவாதிக்கப்பட்டதோடு, அதிகபடியான வன்கொடுமை சம்பவங்கள் நிகழும் பகுதிகளில் வருவாய்த் துறை மற்றும் காவல்துறை இணைந்து தனிகவனம் செலுத்தி, விழிப்புணர்வு முகாம்களை நடத்தி குற்றங்கள் நிகழாவண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம்  அறிவுறுத்தினார். நிலுவையாகவுள்ள வன்கொடுமை சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தீருதவித் தொகை மற்றம் இதர நிவாரணங்கள் காலதாமதமின்றி உரிய காலத்தில் வழங்கிட காவல்துறை மற்றும் வருவாய்த் துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைசெல்வம், கூடுதல் ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ரஞ்ஜித்சிங், விருத்தாசலம் சார் ஆட்சியர் அமித்குமார், கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வபாண்டி, கடலூர் அரசு சிறப்பு வழங்கறிஞர் ஆறுமுகம் மற்றும் காவல் துறை அலுவலர்கள், அரசுஅலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %