0
0
Read Time:1 Minute, 22 Second
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த நாளான இன்று சேத்தியாத்தோப்பு அரிமா சங்கம் ராம் தேவி மருத்துவமனை சார்பில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோயாளிகளுக்கு முக கவசம் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது. முன்னதாக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் மருத்துவ சேவை மற்றும் பொது தொண்டு பெண்ணுரிமை போராட்டம் பற்றி மருத்துவர் அரவிந்தன் விளக்கமளித்தார்.
நிகழ்ச்சிக்கு அரிமா சங்க மாவட்ட தலைவர் டாக்டர் மணிமாறன் முன்னிலை வகித்தனர், நிகழ்ச்சியின் பொருளாளர் சௌந்தர்ராஜன் , செங்குட்டுவன், தில்லை மற்றும் மருத்துவமனைஊழியர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். இறுதியில் கர்ப்பிணி பெண்கள் தொடர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் தாய் சேய் நலம் குறித்தும் டாக்டர் பரணிதரன் விளக்கமளித்தார்.
நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.