கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோயில், கீரப்பாளையம், கம்மாபுரம் ,மங்களூர், நல்லூர் ஆகிய 5 ஒன்றியங்களில் கண்ணிய சம்பூர்ணா என்ற பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான ஐந்தாண்டு திட்டத்தை கேர் இந்தியா மற்றும் ரியல் சமூக சேவை நிறுவனங்கள் இணைந்து டைட்டன் கம்பெனி நிதியுதவியுடன் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் வளர்ச்சிப் பணிகளில் ஒன்றாக காட்டுமன்னார்கோயில் ராணி மஹால் மண்டபத்தில் வளர் இளம் பெண்களுக்கான தொழில் நெறி கண்காட்சி தொழில் முனைவோருக்கான சிறு கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் “சிந்தனைச் செல்வன்” கலந்து கொண்டார். யார் இந்தியாவின் சார்பில் கண்ணிய சம்பூர்ணா திட்ட மேலாளர் “தேவபாலன்” மற்றும் “கேர் இந்தியா” “ஆஷிஷ் பிரேணார்டு” மற்றும் ரியல் நிறுவனம் சார்பாக செல்வி விஜயா ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் முக்கிய அம்சங்களாக விழாவினை சட்டமன்ற உறுப்பினர் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்து தொழில் நெறி கண்காட்சியை பார்வையிட்டு குழந்தைகளிடம் கண்காட்சியைப் பற்றி கேட்டறிந்தார். பின்னர் 1000 தொழில் முனைவோருக்கான சிறு கடன் உதவி வழங்கியும், சிறப்பாக தனது லட்சியத்தை படைப்பாற்றல் ஆக வடிவமைத்த 60 வளரிளம் பெண்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கியும் 40 வளரிளம் பெண்கள் குழுவிற்கு சிறு தோட்டம் அமைப்பதற்கான காய்கறி விதைகளை வழங்கியும் ஆயிரம் அங்கன்வாடி குழந்தைகளின் பெற்றோர்களுக்கு முன்பருவ கல்வி உபகரணம் வழங்குவதே துவங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
செய்தி: பாலாஜி, சிதம்பரம்.