0 0
Read Time:2 Minute, 57 Second

கொள்ளிடம் அருகே தொழிலாளி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். கொலையாளியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பெரம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜான் (வயது 55). கூலி தொழிலாளி. இவர் கொள்ளிடம் அருகே உள்ள எருக்கூர் கிறிஸ்தவ தெருவில் தனது மாமனார் வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் குடியிருந்து வருகிறார். அதே தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் (44) சமையால் தொழிலாளி. இவருடைய மனைவி பிலோமினாமேரி (42). இவர், ஒரு தனியார் மகளிர் குழுவில் தலைவியாக இருந்து வருகிறார். இந்த குழுவில் ஜான் மனைவி ஜோஸ்பின் மேரியும் உறுப்பினராக இருந்து வருகிறார். 

இந்தகுழு மூலம் பெற்ற கடன் தொகையை ஜோஸ்பின்மேரிக்கு முழுமையாக கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நேற்று முன்தினம் இரவு தெருவில் வீட்டு முன்பு பிலோமினாமேரிக்கும், ஜோஸ்பின் மேரி்க்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.அப்போது ஆரோக்கியதாஸ் தனது மனைவிக்கு ஆதரவாக ஜோஸ்பின் மேரியை திட்டி உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த ஜான், ஆரோக்கியதாசை தட்டிக்கேட்டார். இதில் ஜானுக்கும், ஆரோக்கியதாசுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு பின்னர் அது பெரிய சண்டையாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு கட்டிப்புரண்டனர். 

இதில் ஆத்திரம் அடைந்த ஆரோக்கியதாஸ், ஜானின் கழுத்தை பிடித்து நெரித்து கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் ஜான் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கொலையுண்ட ஜான் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆரோக்கியதாசை கைது ெசய்தனர்.கொலையான ஜானுக்கு எக்கோனியா (26), சாலமன் (24), பிரதீப் (21), ஆண்டனி (19) ஆகிய 4 மகன்கள் உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %