மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 57 ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் உள்ளது. இந்த ஊராட்சிகளில், பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நுன் கதிர் இயந்திரம் மூலம் காச நோய் கண்டறியும் முகாமை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா முருகன் தொடங்கி வைத்தார்.
2025 ஆம் ஆண்டுக்குள் காச நோய் இல்லா தமிழகம் என்ற திட்டத்தின் கீழ் 2025 ஆண்டுக்கு முன் காசநோய் இல்லாத தமிழகத்தை கொண்டுவரும் நோக்கத்தில் செயல்படுத்தப்படுகிறது. இதில் ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 200 பேர் முகாமில் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். இதில் ஆக்கூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேசன், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் சக்திவேலன், விஷ்னுபிரியன், முதுநிலை ஆய்வக மேற்பார்வையாளர் வெங்கட்ராமன், நுன்கதிர் வீச்சாளர் ரஞ்சிதா உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.