Read Time:1 Minute, 20 Second
கடலூர் நகராட்சி மேனிலைப் பள்ளியில் தொழிற்கல்வி வேளாண்மை ஆசிரியராக பணியாற்றி வரும் என்.இரவி இந்த கொரோனா காலத்தில் மாணவர்கள் நேரில் வந்து கல்வி கற்க இயலாத சூழலில், கற்றல் திறனை வளர்க்கும் நோக்கத்துடன், இதில் குறைபாடுள்ள பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் வசிக்கும் காராமணிக்குப்பம், வெள்ளப்பாக்கம் பகுதியில் உள்ள மாணவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று, இணையவழி மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பாகும் பாடங்களை கவனித்தல், வினாவிடைகளை எழுதி பதிவிடல், போன்றவற்றை ஆய்வு செய்தும், பாடம் சம்பந்தமான சந்தேகங்களை உடனடியாக போக்கி, தோய்வின்றி படிக்க அறிவுறுத்தி பெற்றோர்களுக்கும் ஆலோசனை வழங்கும் பணியை மேற்கொண்டு வருகிறார். இவரது பணி அப்பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.