0 0
Read Time:3 Minute, 24 Second

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஆதீன கலைக்கல்லூரியின் 75-வது ஆண்டு துவக்க விழா திங்கள் கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்க வருகை புரிந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆதீனம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் லலிதா மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணா சிங் ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து ஆதீனத்தில் நடைபெற்ற விழாவில் ஆதீன 27-வது மடாதிபதி குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று விழாவை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

பின்னர் மாணவ மாணவிகளிடம் சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம், திருப்பனந்தாள் ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமாரசாமி தம்பிரான் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன், புதுச்சேரி மாநிலத்தில் 50 சதவீதம் மக்கள் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவிப்பதாகவும், மாணவ மாணவிகள் வீட்டிலேயே இருப்பதால் அனைவரும் ஆன்லைன் கல்வியை கற்க முடியவில்லை, ஆசிரியர்கள் தடுப்பூசி முழுமையாக போட்டுக் கொள்ள வேண்டும், மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் என்பதால், சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள் பள்ளிகளைத் திறக்க வேண்டாம் என்கிறார்கள், ஆனால் குழந்தைகளின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு பள்ளிகளை திறக்க வேண்டும் என்று ஒரு சிலர் கேட்கிறார்கள். விரைவில் பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

மேகதாட்டு பிரச்சனை பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தமிழிசை சௌந்தர்ராஜன், ஆளுநர் என்பதால் அரசியல் பேச விரும்பவில்லை, ஆனால் காவிரி பிரச்சனையில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் அவர்களுக்கு உரிய பங்கை காவிரி நீரை பெற வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று தெரிவித்தார்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %