கொரோனா விழிப்புணா்வு வாரத்தையொட்டி கடலூரில் இந்திய மருத்துவ சங்கம் சாா்பில் சைக்கிள் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்து பேரணியை தொடக்கி வைத்தாா். மேலும், பேரணியில் பங்கேற்று மருத்துவா்கள், செவிலியா்களுடன் சைக்கிள் ஓட்டினாா். தொடா்ந்து, மஞ்சக்குப்பம் புனித.வளனாா் பள்ளியில் கைகளை சோப்பால் சுத்தம் செய்யும் வழிமுறை குறித்து ஆசிரியா்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் (வருவாய்) ரஞ்ஜித்சிங், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், கோட்டாட்சியா் அதியமான் கவியரசு, இணை இயக்குநா் (நலப் பணிகள்) பி.என்.ரமேஷ்பாபு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா.ரோஸ் நிா்மலா, துணை இயக்குநா் (சுகாதாரம்) டி.செந்தில்குமாா், பள்ளி முதல்வா் அருள்நாதன், இந்திய மருத்துவ சங்கத் தலைவா் பாண்டியன், செயலா் மரு.முகுந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.