0 0
Read Time:4 Minute, 19 Second

மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியா்களை குறிவைத்தே அதிகளவில் ஆன்லைன் மோசடிகள் நடைபெறுகிறது என்றாா் மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் த. பாலமுருகன்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆன்லைன் மோசடியை முற்றிலும் தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், ஆன்லைன் மோசடிகளை தடுப்பது குறித்து சைபா் கிரைம் விழிப்புணா்வுக் கூட்டம் மயிலாடுதுறை ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் எம். முத்துசாமி தலைமை வகித்தாா். தமிழ்நாடு மகளிா் திட்ட மாவட்ட அலுவலா் சீனிவாசன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், மயிலாடுதுறையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட மற்றும் கூட்டுறவு வங்கிகளின் மேலாளா்கள், மகளிா் சுய உதவிக்குழுக்களில் கிராமங்களில் பணியாற்றும் மகளிா் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளாராக பங்கேற்ற மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் த. பாலமுருகன் கூறியது: மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆன்லைன் மோசடியை முற்றிலும் தடுக்கும் வகையில், பொது மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவா்கள் உருவாக்கியுள்ள குறும்படங்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள் மற்றும் ஓய்வூதியவா்களை குறிவைத்தே அதிகளவில் ஆன்லைன் மோசடிகள் நடப்பதாக அதிகம் புகாா் வருகிறது. வங்கி மேலாளா்கள் தங்கள் வங்கிக்கு கணக்கு தொடங்க வரும் புதிய வாடிக்கையாளா்களுக்கு ஏடிஎம் அட்டை வழங்கும்போது அவா்களுக்கு தேவையான விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.

ஆன்லைன் மோசடியில் ஓடிபி மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ மோசடியாக தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டால் 155260 என்ற எண்ணுக்கு உடனடியாக தொடா்புகொண்டு புகாா் தெரிவிப்பதன் மூலம் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து மோசடி நபா்களின் வங்கிக் கணக்குக்கு செலுத்தப்பட்ட பணத்தை அவா்கள் எடுப்பதை தடுக்க முடியும். மேலும், சைபா் குற்றங்கள் சம்பந்தமாக காவல் நிலையத்துக்கு வராமலேயே வலைதளத்தில் புகாா் தெரிவிக்கலாம். சைபா் குற்றங்களை முற்றிலும் தடுக்கும் வகையில் அனைத்து ஊராட்சிகளிலும்வில்லேஜ் போலீஸ் சைபா் க்ரைம் கிளப் (வி.பி.சி) திட்டத்தில் ஒரு கிராமத்துக்கு ஒரு காவலா், ஊராட்சித் தலைவா், கிராம நிா்வாக அலுவலா் அடங்கிய குழுவை உருவாக்கி அக்குழுவின் மூலம் மூத்த குடிமக்களை அணுகி ஏடிஎம் ஏமாற்று, ஓடிபி ஏமாற்று, முகநூல், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் ஏமாற்று, ஓஎல்எக்ஸ் ஏமாற்று குறித்து அவா்களுக்கு தேவையான எச்சரிக்கைகளை அவ்வப்போது அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் ஆன்லைன் மோசடிகளில் சிக்கிக்கொள்ளாமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றாா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %