0 0
Read Time:1 Minute, 14 Second

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உணவகத்திற்குள் அமர்ந்திருந்த நபரை முன்விரோதம் காரணமாக 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அடித்து உதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள உணவகத்திற்கு நேற்று முன்தினம் திடீரென வந்த ஒரு கும்பல், உள்ளே இருந்த விக்னேஷ் என்ற இளைஞரை சரமாரியாக தாக்க தொடங்கினர். அப்போது அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடிய நிலையில், விக்னேஷின் சட்டை கிழியும் வரை தொடர்ந்து தாக்கிய கும்பல் கடையில் இருந்த பொருட்களை கீழே தள்ளி சூறையாடிவிட்டு தப்பிச் சென்றனர்.

இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானதையடுத்து, 8 பேர் மீது வழக்கு பதிந்துள்ள போலீசார் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %