0 0
Read Time:2 Minute, 8 Second

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொற்றின் எண்ணிக்கை சற்று அதிகரித்து காணப்படுகிறது. 9-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஆனால் புதிய தளர்வுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. சென்னையில் மக்கள் கூடும் சில பகுதிகளில் திடீர் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. 

இந்நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 9-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைசெயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தக் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறதா? அதற்கு ஏற்ற வகையில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டுமா? என்பது பற்றி இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரிப்பதால், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %