0 0
Read Time:5 Minute, 56 Second

தகராறை சாமதானப்படுத்த முயன்ற அரசு ஊழியரை சாதாரண நபர் சாதிய வன்மத்துடன் காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் ஒட்டர்பாளையம் கிராமத்தில் கோபிநாத் என்பவர் காலில், பட்டியல் இனத்தை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் மன்னிப்பு கேட்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அன்னூர் அடுத்த ஒட்டர் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி. பட்டியலின சமூகத்தை சேர்ந்த இவர், அப்பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் தண்டல்காரராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கோபிநாத் என்பவர், தனது சொத்து விவரங்களை சரிபார்க்க கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது கிராம நிர்வாக அலுவலர்  கலைச்செல்வியிடம் அணுகி விபரங்களை அளித்துள்ளார். அப்போது முறையான ஆவணங்கள் இல்லை எனவும், சரியான ஆவணங்களை கொண்டு வரும்படி கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி கூறியதாக தெரிகிறது. இதனால் கோபிநாத் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், கலைச்செல்வியை தகாத வார்த்தைகளில் பேசியதாகவும் கூறப்படுகிறது. அப்போது அங்கிர்ந்த வி.ஏ.ஒ உதவியாளர் முத்துசாமி குறுக்கிட்டு அரசு அலுவலரிடம் தவறாக பேச வேண்டாம் என கூறியதாக கூறப்படுகிறது.

அப்போது கோபிநாத் முத்துசாமியின் சாதியைச் சொல்லி, தகாத வார்த்தைகளில் பேசி ஊரில் இருக்க முடியாது என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. மேலும் பணியில் இருக்க வேண்டும் என்றால் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையெனில், தனது செல்வாக்கை பயன்படுத்தி வேலையில் இருந்து நீக்கி விடுவேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த  மிரட்டலுக்கு பயந்த முத்துசாமி அழுதபடி கோபிநாத்தின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார். மற்றவர்கள் தடுத்தும் தொடர்ந்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார். காலில் விழுந்த முத்துசாமியை ’என் மேலையும் தவறு உள்ளது. உன்மேல எனக்கு கோபம் இல்லை. மன்னித்து விட்டேன் எழு. ஒன்னும் பிரச்சனை இல்லை’ என கோபிநாத் சொல்லி உள்ளார். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கோவை மாவட்டம் அன்னூர் ஓட்டர்பாளையம் வி.ஏ.ஒ அலுவலகத்தில்,பட்டா ஆவணம் சரி பார்க்க வந்த கோபிநாத் என்ற நபர்,பணியில் இருந்த தாழ்த்தப்படுத்தபட்ட சமூகத்தை சேர்ந்த கிராம உதவியாளரை அச்சுறுத்தியதால் அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் காட்சிகள் வெளியானது

இந்த நிலையில் கோபிநாத் அன்னூர் காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் முத்துசாமி தன்னை தாக்கியதாக புகார் அளித்துள்ளார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முத்துசாமியை கோபிநாத் சாதியைச் சொல்லி திட்டியதுடன் மன்னிப்பு கேட்குமாறு மிரட்டியதாக கூறப்படும் நிலையில் சாதிய வன்கொடுமை தொடர்பான புகார் எதுவும் தற்போது வரை பதிவாகவில்லை. தகராறை சாமதானப்படுத்த முயன்ற அரசு ஊழியரை சாதாரண நபர் சாதிய வன்மத்துடன் காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்திற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கோபிநாத்தை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் வலியுறுத்தி உள்ளனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி அன்னூர் பகுதியில் அவ்வமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவ்வமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பட்டியலினத்தவர் காலில் விழுந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %