ஒலிம்பிக் தடகளத்தில் முதல் தங்கம்… 100 ஆண்டுகளுக்கு பிறகு வரலாற்று சாதனை படைத்த இந்தியா!
ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்!
டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான நீரஜ் சோப்ரா தங்கம் பதக்கம் வென்றுள்ளார். இதன் காரணமாக, ஒட்டு மொத்த இந்திய தேசமே மகிழ்ச்சியடைந்து உள்ளது.
ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்று இந்திய வீரர் நீரஜ் ஜோப்ரா சாதனைப் படைத்துள்ளார். தொடர்ந்து ஈட்டி எறிதலில் முதல் இரண்டு சுற்றுகளில் அதிக தூரம் ஈட்டி எறிந்து தொடர்ந்து தங்கப் பதக்கத்தை நோக்கி முன்னிலையில் இருந்த நீரஜ் ஜோப்ரா, 6 சுற்றுகள் முடிவில் தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். ஒலிம்பிக் தடகளப்போட்டியில் சுதந்திர இந்தியா முதல் முறையாக தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. நீரஜ் ஜோப்ரா தங்கம் வென்றுள்ள நிலையில், இந்தியா ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் 66 வது இடத்தில் இருந்து 47 ஆவது இடத்திற்கு முன்னோக்கி நகர்த்துள்ளது.