0 0
Read Time:2 Minute, 31 Second

நாடு முழுவதும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட் 84 நாட்கள் இடைவெளியிலும், பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசி 28 நாட்கள் இடைவெளியிலும் 2 டோசாக செலுத்தப்படுகிறது. உலகம் முழுவதும் பெரும்பாலான தடுப்பூசிகள் 2 டோஸ்களாக வழங்கப்படும் நிலையில், முதலில் ஒரு தடுப்பூசியையும், 2 ஆவது மற்றொரு தடுப்பூசியையும் கலப்பு தடுப்பூசியாக வழங்குவது தொடர்பாக பல நாடுகள் ஆய்வு மேற்கொள்கின்றன. இந்தியாவிலும் கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகளை கலப்பு தடுப்பூசிகளாக பயன்படுத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவ கல்லூரியில் ஆய்வு செய்யப்பட உள்ளது. 

இதற்கிடையே, தவறுதலாக கோவாக்சின், கோவிஷீல்ட் டோஸ்கள் செலுத்தப்பட்டவர்களுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை தடுப்பூசிகள் வழங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் சித்தார்த்நகரில் முதலில் டோசாக ஒரு தடுப்பூசியும், இரண்டாவது டோசாக மற்றொரு தடுப்பூசியும் செலுத்தப்பட்ட 18 பேரிடம் மே மற்றும் ஜூன் மாதத்திற்கு இடையே ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது, அடினோவைரஸ் முறையில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் செலுத்தப்பட்டவர்களுக்கு, வைரஸ் செயலிழப்பு முறையில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தியதில், கலப்பு தடுப்பூசி பாதுகாப்பு நிறைந்தது என்றும் சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்குகிறது என்றும் தெரியவந்துள்ளது. இருப்பினும், சரியான முறையிலான ஆய்வும் மேற்கொள்ளப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.  

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %