0 0
Read Time:2 Minute, 33 Second

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் பெரம்பூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட நரசிங்கநத்தம் ஊராட்சியில் நரசிங்கநத்தம், கீழ காலனி, சாமியாங்குளம் ஆகிய பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட தலித் குடும்பத்தினர் வாய்க்கால் புறம்போக்கு பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் பட்டா கேட்டு காத்திருக்கும் நிலையில், நரசிங்க நத்தம் பகுதியில் களம் புறம்போக்கு பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதாக கூறி மற்றொரு தரப்பினர் ஜேசிபி வாகனம் கொண்டு சுத்தம் செய்து உள்ளனர். திங்கள் கிழமை காலை அப்பகுதிக்கு வந்த தாழ்த்தப்பட்ட பிரிவினர் 35 -ற்கும் மேற்பட்ட குடிசைகளை கட்டியுள்ளனர்.

இதனையடுத்து அங்கு வந்த மற்றொரு தரப்பினர் குடிசைகளை காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் அடித்து நொறுக்கி கூரைகளை பிய்த்து எறிந்தனர். இதனைத் தொடர்ந்து இரண்டு தரப்புக்கும் மோதல் ஏற்படாமல் இருக்க அதிரடிப்படை காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். தரங்கம்பாடி தாசில்தார் ஹரிதரன், பெரம்பூர் காவல் ஆய்வாளர் சிவதாஸ் ஆகியோரின் முன்னிலையில் வருவாய்த்துறையினர் மீதம் இருந்த குடிசைகளை அகற்றினர்.

அதை தொடர்ந்து நரசிங்கநத்தம் பகுதியில் பெரம்பூர் காவல் ஆய்வாளர் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குடிசைகள் மீது ஒரு பிரிவினர் தாக்குதல் நடத்தும் நேரடி காட்சிகள் வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சீனுவாசன் அதிகாரிகள் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %