அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக டாக்டர் ஆர்.வேல்ராஜை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.
துணைவேந்தர் பதவிக்கு நாடு முழுவதும் இருந்து 160-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில், அவற்றிலிருந்து 3 பேரின் பெயர்களை தேடல் குழு ஆளுநருக்கு பரிந்துரைத்தது.
இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக தமிழகத்தைச் சேர்ந்த வேல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 1992-ம் ஆண்டு முதல் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் வேல்ராஜ், அடுத்த 3 ஆண்டுகளுக்கு துணைவேந்தர் பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த முறை சுரப்பா துணைவேந்தராக நியமிக்கப்பட்ட போது, வெளிமாநிலத்தவர் என்று எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது தமிழகத்தைச் சேர்ந்தவரே துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.