0 0
Read Time:5 Minute, 14 Second

தமிழகம் முழுவதும் உள்ள நகரம் மற்றும் கிராம புறங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆம்புலன்ஸ் வசதி சேவை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் தொடங்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள திருக்களாச்சேரி ஊராட்சியில் ஏழை எளிய மக்கள் என அனைத்து சமுதாய மக்களும் பயன்படுத்தும் வகையில் தமுமுகவின் 172-வது ஆம்புலன்ஸ் தொடங்கப்பட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருக்களாச்சேரி ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாக சபை முத்தவல்லி முகமது ரபிக் சுல்தான் தலைமை வகித்தார், மயிலாடுதுறை பாராளமன்ற உறுப்பினர் இராமலிங்கம், பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமுமுக முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் முகமது காசிம் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநிலத் தலைவரும் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்மான எம்.எச். ஜவாஹிருல்லாஹ் கலந்து கொண்டு திருக்களாச்சேரியை சேர்ந்த மெ.மு முகம்மது சுல்தான் குடும்பத்தார்கள் சார்பில் வழங்கப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தை அனைத்து சமுதாய மக்கள் பயன்பெறும் வகையில் வழங்கி‌ பேசினார்.

நிகழ்ச்சியில் செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக், ஊராட்சி மன்ற தலைவர் சம்சாத் ரபிக், வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் கார்த்திக் சந்திரகுமார், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் சித்திக், ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், மாநில செயலாளர் அப்துல் ரஹீம், மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் கிதர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் இதில் கலந்து கொண்ட தமுமுகவின் மாநில தலைவர் ஜவஹிருல்லாஹ் ஆம்புலன்ஸ் வசதியை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்

தமிழ்நாட்டின் நிதி நிலை குறித்து நிதித்துறை அமைச்சர் பழனிவேல்ராஜன் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை மிகவும் கவலை தரக்கூடியதாக உள்ளது என தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளாக மிக மோசமான நிதி நிர்வாகத்தை அதிமுக அரசு தந்திருப்பதற்கு வெள்ளை அறிக்கையே சான்று எனக் கூறினார் .

அதிமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் திமுகவை விமர்சிப்பதற்கு காரணம் அவர்களின் நிர்வாக சீர்கேடு பல்வேறு தரவுகளுடன் வெளிப்பட்டுவிட்டது என்ற உண்மையை மறைப்பதற்காக தான் குற்றச்சாட்டுகளை அவர்கள் கூறி வருகின்றனர் எனவும்

கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை ,மின்சாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் எப்படிப்பட்ட முறைகேடுகள் நடைபெற்றன என்பது பற்றி சட்டமன்றத்தில் உள்ள தலைமை தணிக்கை ஆணையாளர் தெளிவான அறிக்கையை சமர்ப்பித்து உள்ளதாகவும் கூறினார்

கொரோனா காலகட்டத்திலும் கூட கடந்த அதிமுக ஆட்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை
மக்களுடைய நிதிகளை எல்லாம் எவ்வாறு பயன்படுத்தியுள்ளது என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறினார்.

ஆதாரங்களின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் ஒன்றும் தவறில்லை எனவும் அந்த வகையில்தான் இன்று உள்ளாட்சித் துறையில் ஊழல் செய்த முன்னாள் அமைச்சர் வீட்டில் சோதனை நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.

நீட் தேர்வை ரத்து செய்யவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் நிச்சயமாக ரத்து செய்யப்படும் என தெரிவித்தார்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %