கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சிக்காக உழவர் நலன் மற்றும் வேளாண்அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் வந்திருந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வேளாண் துறைக்கு வரும் 14-ம் தேதி தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யவுள்ளோம். வரும் 10 ஆண்டுகளில் வேளாண் துறை மிகப்பெரிய வளர்ச்சி அடையும் சூழ்நிலையை ஏற்படுத்துவோம்.
கரோனா காலத்தில் தொழில் துறை முடங்கிய நிலையிலும் விவசாயம் வளர்ச்சி பெற் றுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியாக 3.50 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்ய திட்டமிட்ட நிலையில் 4.5 லட்சம் சாகுபடி செய்துள்ளனர். குறுவை பருவத்திற்கான பயிர்க் காப்பீடு குறித்து வேளாண் நிதிநிலை அறிக்கையில் காணலாம். மழை யால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மணிகள் சேதமடைந்து வருவது தொடர்பான செய்திகளை பார்த்த உடனே, 20 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு, 1.70 லட்சம் நெல் மூட்டைகள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.