0
0
Read Time:1 Minute, 22 Second
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை, தினசரி விசாரித்து 6 மாதங்களுக்குள் முடிக்க கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில், அண்மையில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சி.பி.ஐ.யால், கைது செய்யப்பட்ட அருளானந்தம் என்பவன் ஜாமீன் கோரிய மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் சிபிஐக்கு உதவும் வகையில் சிபிசிஐடி எஸ்.பி. முத்தரசியை நியமிப்பதாக தெரிவித்த நீதிபதி, அருளானந்தத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.