0 0
Read Time:2 Minute, 49 Second

 நெய்வேலி நிலக்கரி சுரங்க லாரி மோதி ஒருவர் உயிரிழந்ததால் மற்ற லாரிகளுக்கு பொதுமக்கள் தீ வைத்துள்ளனர். 30 லாரிகளை அடித்து நொறுக்கிய மக்கள் 5 லாரிகளுக்கு தீ வைத்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் 2வது அனல்மின் நிலைய பின்புறத்தில் பயன்படுத்தப்பட்ட நிலக்கரி சாம்பல் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். இந்த சாம்பல்கள் பல்வேறு பணிகளுக்காக வெளியே எடுத்துச் செல்லப்படும்.  

இந்த சாம்பல்கள் மூலம் சாலை போடும் பணிகள் உள்ளிட்ட பல தொழில்முறைகளுக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த நிலையில் விக்கிரவாண்டி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று கொண்டு வருகிறது. இதனால், விபத்து ஏற்பட்ட சாலையில் தினமும் 150-க்கும் மேற்பட்ட லாரிகளில் நிலக்கரி சாம்பல்கள் எடுத்துச் செல்லப்படுகிறது.

இதனையடுத்து, நிலக்கரி சாம்பல்கள் எடுத்துச் செல்லும் லாரிகள், மேலக்குப்பம் என்ற பகுதியில் வரும் போது அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் என்பவர் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டியிருந்தார். அப்போது, லாரியில் சிக்கிய கோவிந்தன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பலத்த காயமடைந்த அவரது மனைவி நெய்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் நிலக்கரி சாம்பல்கள் எடுத்துச் செல்லும் லாரிகள் மூலம் பல்வேறு விபத்துகள் நடைபெறுவதால் 30 லாரிகளை அடித்து நொறுக்கிய மக்கள் 5 லாரிகளுக்கு தீ வைத்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %