0 0
Read Time:2 Minute, 53 Second

மயிலாடுதுறையில் பட்டியலின பெண்களை தாக்கியவர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்திடுக என தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (எம்) மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகேயுள்ள நரசிங்க நத்தம் எனும் கிராமத்தில் வசித்து வரும் பட்டியலின மக்களின் வீடுகள் அண்மையில் ஒரு தீ விபத்தில் சேதமடைந்துள்ளன. அதனை தொடர்ந்து நரசிங்க நத்தம், கீழ்க்காலனி, சாமியங்குப்பம் ஆகிய பகுதிகளைச் சார்ந்த  நாற்பதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அருகில் உள்ள மந்தை திடலில் குடிசைகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினர் அந்நிலங்களை ஆக்கிரமிக்கும் முயற்சியோடு, குடிசை அமைக்க விடாமல் தடுத்தும் உருட்டு கட்டை, கொம்பு மற்றும் ஆயுதங்களோடு மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளனர். 

இத்தாக்குதலில் இரண்டு பெண்கள் உட்பட பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் இதுவரை கைது செய்யாதது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.

பட்டியலின மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய சாதிவெறியர்கள் மீது உடனடியாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

இந்த தாக்குதலின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கும், வீடிழந்தவர்களுக்கும் வீட்டுமனை வழங்கிடவும், உரிய இழப்பீடுகள் வழங்கிடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %