0 0
Read Time:2 Minute, 12 Second

கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள தொரவளூர் கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைக்காக கடந்த 11ம் தேதி இரவு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது பணியில் இருந்த செவிலியர் ஒருவர் அந்த நபருக்கு சிகிச்சைக்காக ஊசி போடும்போது, செல்போனில் பேசிக்கொண்டே ஊசியை எடுப்பதும், மருந்து செலுத்துவதும், பிறகு நோயாளிக்கு போடுவதுமாய் சிகிச்சை அளித்துள்ளார். செல்போனில் பேசிக்கொண்டே ஊசி போடுகிறீர்களே…? என அருகில் இருந்த உறவினர் ஒருவர் கேட்டபோது, அவரை உதாசினப்படுத்தி வெளியே அனுப்பியுள்ளார். இச்சம்பவத்தை அங்கிருந்தவர்கள் செல்போனில் படமெடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

இது கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து மருத்துவ பணிகள் இணை இயக்குநர் ரமேஷ்பாபு கூறுகையில், செவிலியர் செல்போனில் பேசிக்கொண்டே நோயாளிக்கு ஊசி செலுத்தியது தொடர்பாக உரிய விசாரணை நடத்துமாறு, விருத்தாசலம் அரசு தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் எழிலுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக விளக்கம் கேட்டு செவிலியருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதனால் அரசு தலைமை மருத்துவ அலுவலர் எழில் அளிக்கும் அறிக்கையின்படியும், செவிலியர் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையிலும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %