75-வது ஆண்டு இந்திய சுதந்திர தின கொடியேற்று விழா மற்றும் எல்.ஐ.சி ஆர்.எஸ்.புரம் கிளை சார்பில் முகவர்களுக்கான புது வணிகப் போட்டி!
“டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி விருது” 75-வது ஆண்டு இந்திய சுதந்திர தின கொடியேற்று விழா மற்றும் எல்.ஐ.சி ஆர்.எஸ்.புரம் கிளை சார்பில் முகவர்களுக்கான புது வணிகப் போட்டி ஆகஸ்ட் 2 முதல் 14 வரை நடத்தப்பட்டு வெற்றி பெற்ற முகவர்களுக்கு கேடயம் மற்றும் பதக்கம் வழங்கும்
விழா இன்று 15/08/2021 காலை 9 மணிக்கு ஆர்.எஸ். புரம் எல்.ஐ.சி கிளை அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஆர்.எஸ்.புரம் முதுநிலை கிளை மேலாளர் ஈ.கோ.ரவி தலைமை ஏற்று புது வணிகப் போட்டியில் பங்கு கொண்டு வெற்றி பெற்ற முகவர்களுக்கு கேடயம் மற்றும் பதக்கம் வழங்கி பாராட்டு தெரிவித்தார். உதவி கிளை மேலாளர் (வி) எம்.வி.அனில்குமார், வடவள்ளி கிளை மேலாளர் ஜே.ஜோசப்ஆரோக்கியநாதன் ஆகியோர் இணைந்து முகவர்களுக்கான புது வணிகப் போட்டியில் பங்குபெற்று வெற்றி பெற்றவரும், கடந்த 36 ஆண்டுகளாக சமூகப் பணியில் ஈடுபட்டு வரும் தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றத்தின் தலைவர் முனைவர் எம் சிவக்குமார், மற்றும் சமூகப் பணியில் கடந்த 12 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் சி.நிவேதா அவர்களுக்கும் 75-வது ஆண்டு சுதந்திர தின கொடியேற்று விழா சிறப்பு விருதாக “டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி விருது” திண்டுக்கல் பசுமை வாசல் பவுண்டேஷன் நிறுவனத் தலைவர் திரு ஆ.கோகுல்நாத், சென்னை தேசிய மக்கள் உரிமைகள் இயக்கம் திருநங்கைகள் பிரிவு மாநில தலைவி முனைவர் வப்ரியா, தமிழ்நாடு அக்னி பெண்கள் தமிழ்ச் சங்க நிறுவனர் முனைவர் த.உமா ராணி, மற்றும் கிருஷ்ணகிரி கம்பர் இளைஞர் நற்பணி மன்றத்தின் தலைவர் மதிப்புறு முனைவர் இ.ரவீந்தர்,தலைமை ஒருங்கிணைப்பாளர் தருமபுரி மதிப்புறு முனைவர் தகடூர் சண்முகவடிவேல் ஆகியோர் இணைந்து வழங்கிய விருது சான்றிதழ், பதக்கம் ஆகியவற்றை முதுநிலை கிளை மேலாளர் ஈ.கோ.ரவி வழங்கினார்.
விழாவில் எல்.ஐ.சி வளர்ச்சி அதிகாரிகள் வி.முத்துசாமி,ஆர்.ராஜ்குமார்,முகவர்கள் டி. ஸ்ரீதர், வி.செல்வராஜ் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.