மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் பள்ளி கல்லூரி மற்றும் அரசு அலுவலங்களில் 75 வது சுதந்திர தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
செம்பனார்கோவிலில் உள்ள பூம்புகார் தொகுதி சட்டமன்ற அலுவலகத்தில் 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம். முருகன் கலந்துகொண்டு தேசிய கொடிஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஒன்றியக்கழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் கலந்துகண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் முன்னதாக எம்எல்ஏ நிவேத முருகன் கலந்துகொண்டு 75வது சுதந்திர தின கொடி கம்ப கல்வெட்டை திறந்து வைத்து சிறப்பாக பணியாற்றிய அலுவலக ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஊராட்சி செயலர்களுக்கு நினைவுப் பரிசுகள், பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி பேசினார்.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் ( ஊராட்சிகள்) திருமலை கண்ணன், ஒன்றிய குழு துணைத் தலைவர் பாஸ்கர், நாகை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், அப்துல்மாலிக், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் செம்பனார்கோவில் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 75- வது சுதந்திர தின விழாவில் நிர்வாக இயக்குனர் என்.எஸ்.குடியரசு கலந்துகொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து பேசினார் உடன் பள்ளி தலைமையாசிரியர் ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தரங்கம்பாடி பிஷப் ஜான்சன் நினைவு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜான் சைமன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார் இதில் ஆசிரியர்கள் உள்ளிட்ட அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
பொறையார் சர்மிலா காடஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பள்ளி நிர்வாகி பாண்டியராஜன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வட்டாட்சியர் ஹரிதரன் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். இதில் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் பொறையார் தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில் நடைபெற்ற 75 ஆவது சுதந்திர தின விழாவில் கல்லூரி முதல்வர் ஜீன் ஜார்ஜ் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார். இதில் துணை முதல்வர்கள் ஜான்சன் ஜெயக்குமார், ஜோயல் எட்வின் ராஜ் உள்ளிட்ட பேராசிரியர்கள் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் முடிவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதேபோல் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், ஊராட்சி மன்ற அலுவலகங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.