மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் திங்கள் கிழமை தோறும் பருத்தி ஏலம் நடை பெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தவார திங்கட்கிழமை நாகப்பட்டினம் விற்பனை குழு செயலாளர் ரமேஷ் தலைமையில் நடை பெற்ற மறைமுக ஏலத்தில் பருத்தி அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ 7,893-க்கும் சராசரி 76.50-க்கும் குறைந்த பட்ச விலை 75.00-க்கும் விலை போனதால் விவசாயிகள் பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் இந்த கொரோனா கால கட்டத்தில் தங்கள் விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்திட வழிவகை செய்திட்ட தமிழக அரசுக்கும், தமிழக முதல்வருக்கும், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், துறை செயலர், ஆணையர் மற்றும் அதிகாரிகள் , வியபாரிகள் அனைவருக்கும் தங்களது நன்றியை தெரிவித்தனர்.
மேலும் எதிர் வரும் காலங்களில் தங்களது அனைத்து விதமான விவசாய விலை பொருட்களையும் விற்பனை கூடத்திற்கு எடுத்து வந்து இதை போல் நல்ல விலை பெற்றிட ஏதுவாக கூடுதல் கிடங்கு வசதி ஏற்படுத்தி தரவேண்டி தமிழக முதல்வருக்கும், வேளாண் துறை, அமைச்சருக்கும் வேண்டுகோள் வைத்தனர்.
இந்த ஏலத்தில் கடலூர், விழுப்புரம், தேனி, சத்திய மங்களம், நாகை, மயிலாடுதுறை, கும்பகோணம், திருவாரூர் போன்ற மாவட்டங்களில் இருந்து சுமார் 10 வியபாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளின் விலை பொருளான பருத்திக்கு நல்ல விலைக்கு எடுத்தனர். மேலும் விற்பனை குழு செயலாளர் ரமேஷ் கூறியதாவது விவசாயிகள் இதை போல் தங்களது விளை பொருட்களான பச்ச பயறு, உளுந்து, எள், நிலகடலை, தேங்காய், முந்திரி போன்ற விளை பொருட்களை எடுத்து வந்து பயன் அடைய வேண்டும் என விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.