0 0
Read Time:8 Minute, 58 Second

முளைகட்டிய பயறுகளை உண்பதால் கிடைக்கும் நன்மைகள்!. தானியங்களை வீட்டிலேயே முளைக்கச்செய்து சாப்பிடுவதால் உண்டாகும் பலன்கள்.!!

முளைகட்டிய தானியம். பச்சைப்பயறு, கொண்டக்கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, கொள்ளு மற்றும் கறுப்பு உளுந்து போன்ற தானியங்களை முளைக்கச் செய்து சாப்பிடுவதுதான் முளைதானிய உணவு எனப்படும் இயற்கை உணவாகும்.

இந்த தானியங்களை நன்றாக கழுவி 8 மணி நேரம் ஊற வைத்து பின் ஈரமான பருத்தி துணியில் சுற்றி வைத்து விட்டால் 8 – 10 மணிக்குள் தானியம் முளைவிட்டு இருக்கும். இந்த தானிய உணவானது ஆரோக்கியத்தையும் அளவற்ற சக்தியையும் அள்ளித்தரும் மலிவான உன்னதமான உயிர் உணவு.

இந்த உணவின் மூலம் புரதம், கால்சியம், சோடியம், இரும்புத்தாது, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவைகள் கூடுதலாக கிடைப்பதுடன் விட்டமின் ஏ, பி1 மற்றும் பி2 போன்றவையும் அபரிமிதமாக கிடைக்கிறது. முளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.

இந்த உணவின் மூலம் புரதம், கால்சியம், சோடியம், இரும்புத்தாது, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவைகள் கூடுதலாக கிடைப்பதுடன் விட்டமின் ஏ, பி1 மற்றும் பி2 போன்றவையும் அபரிமிதமாக கிடைக்கிறது.

முளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். முளைவிட்ட கோதுமை சாப்பிட்டால் புற்றுநோய் மட்டுப்படும்.

முளைவிட்ட எள்ளு சாப்பிட்டால் ஒல்லியானவர்களுக்கு உடல் போடும் கண்பார்வை மேம்படும். முளைவிட்ட கறுப்பு உளுந்து, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும்.

முளைவிட்ட கொண்டக்கடலையை விளையாட்டு வீரர்கள் மற்றும் கடினமான உடல் உழைப்பாளிகள் அதிகம் சாப்பிடலாம். காரணம் தங்களது சக்தி குறையாமல் பார்த்துக் கொள்ளலாம்.

முளைவிட்ட கொள்ளு சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.. மூட்டுவலி தீரும். எந்தவித நோய்களும் வராமல் தடுக்கும் சக்தியும் இந்த முளைவிட்ட தானியங்களுக்கு அதிகம் உண்டு.

எப்படிச் சாப்பிடக்கூடாது?

*காலை நேரம் வெறும் வயிற்றில் முளைகட்டிய தானியங்கள் சாப்பிட கூடாது. காரணம், தானியங்களை தண்ணீரில் ஊறவைத்து முளைகட்டச் செய்வதால் (germination process), அவற்றில் அமிலத்தன்மை அதிகரித்து வைட்டமின் ‘சி’ சத்து அதிகமாகச் சேர்ந்திருக்கும். பொதுவாக, காலை நேரம் வெறும் வயிற்றில் அமிலத்தன்மை அதிகமாகச் சுரக்கும். அப்போது முளைகட்டிய தானியத்தை சாப்பிட்டால் அசிடிட்டி, அல்சர் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, இட்லி, தோசை, சப்பாத்தி, சாப்பாடு என ஏதாவது ஒரு காலை உணவுடன் வேகவைக்காத முளைகட்டிய தானியங்கள் சாப்பிடுவது நல்லது. ஒருவேளை காலையில் முளைகட்டிய தானியங்களை மட்டும் சாப்பிடுவதாக இருந்தால், அவற்றை வேகவைத்துச் சாப்பிடுவது பரிந்துரைக்கத்தக்கது.

*காலை, மதியம், இரவு என எந்த வேளையாக இருந்தாலும், முளைகட்டிய தானியங்களை மட்டும் அவ்வேளைக்கான உணவாகச் சாப்பிடக் கூடாது. ஏனெனில், முளைகட்டிய தானியத்தில் புரோட்டீன், விட்டமின் சத்துகள் கிடைத்தாலும், நம் உடலுக்கு அவை மட்டுமே போதாது. எனர்ஜி, கார்போஹைட்ரேட்ஸ், மினரல்ஸ் போன்ற சத்துகளும் சமச்சீர் அளவுகளில் தேவை என்பதால், முளைகட்டிய தானியங்களை மட்டும் ஒரு வேளைக்கான உணவாகச் சாப்பிடக்கூடாது.

முளைகட்டிய தானியங்களைச் சாப்பிடும்போது சிலருக்கு செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம் என்பதால், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அவற்றைத் தவிர்க்க வேண்டும். முளைகட்டிய பச்சைப்பயறு எளிதில் செரிமானம் ஆகக்கூடியது என்பதால், 5 – 10 வயதுக் குழந்தைகளுக்கு அதை அடிக்கடி தரலாம். மற்ற வகை முளைகட்டிய தானியங்களை அவர்களுக்கு எப்போதாவது கொடுக்கலாம். 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் எல்லா வகையான முளைகட்டிய தானியங்களையும் சாப்பிடலாம். முளைகட்டிய தானியங்களை வறுத்து ஸ்நாக்ஸாகக் கொடுக்கும்போது குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

*தினமும் ஒரே வகை தானியத்தை முளைக்கவிட்டு சாப்பிடுவது தவறு. மாறாக, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தானிய வகைகளை உட்கொள்வதே சிறந்தது.

தானியங்களை ஊறவைக்க தூய்மையான தண்ணீரையே பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். இந்தக் காரணத்தினாலேயே, கடைகளில் ரெடிமேடாக கிடைக்கும் முளைகட்டிய தானியங்களைத் தவிர்த்து, வீட்டில் தயாரித்து சாப்பிடுவதே சிறந்தது.

*அசிடிட்டி, அல்சர், நெஞ்சு எரிச்சல் பிரச்னைகள் உள்ளவர்களும், கர்ப்பிணிகள் மற்றும் வயதானவர்களும் முளைகட்டிய தானியங்களை நிச்சயமாக வேகவைத்துதான் சாப்பிடவேண்டும்.”

காய்கறி பழங்களை விட அதிக சத்து

பச்சைக் காய்கறிகள் (Vegetables) மற்றும் பழங்களை விட அதிக அளவில் வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் மற்றும் அவசியமான கொழுப்பு (Fat) ஆகியவை உள்ளன. இவை எடையைக் குறைக்கவும், செரிமானத்தை சீராக்கவும் உதவுகிறது. உடலில் உள்ள தேவையற்ற நச்சுப் பொருட்கள் மற்றும் கொழுப்புகளை வெளியேற்றுவதில் முளை கட்டிய தானியங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

விட்டமின் :

முளை கட்டிய தானியங்களில், சாதாரண தானியங்களில் உள்ளதை விட 20 மடங்கு அதிகமான அளவில் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். குறிப்பாக வைட்டமின் ஏ (Vitamin A), பி-காம்ப்ளக்ஸ், சி மற்றும் ஈ ஆகியவை அதிரிகரிக்கின்றன.

முளைகட்டிய பயறு செய்யும் முறை
பச்சைப்பயறு 100 கிராம் அளவு எடுத்துக்கொண்டு அதனை ஒரு பாத்திரத்தில் நன்றாக நீரில் ஊற வைக்க வேண்டும். 10 மணி நேரம் ஊறவைத்து, பின்பு தண்ணீரை வடிகட்டி பயரினை ஒரு நல்ல சுத்தமான காட்டன் துணியில் வைத்து கட்டிவிட வேண்டும். பின்பு 12 மணிநேரம் கழித்து பார்க்கிறபோது முழுவதுமாக முளை கட்டிய பயறு தயாராகிவிடும். முளை கட்டிய தானியங்களை பயன்படுத்தும் போது அதனுடைய முழுமையான புரதச்சத்தை நாம் பெறமுடியும் ஏனெனில் முளைகட்டுவதால் அதில் அதிகஅளவு புரதச்சத்து இருக்கும்.

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %