திட்டக்குடியில் புகையிலைப் பொருள்கள் விற்கப்பட்ட மளிகைக் கடைக்கு உணவுப் பாதுகாப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
திட்டக்குடி – விருத்தாசலம் சாலைப் பகுதியில் உள்ள ஒரு மளிகைக் கடையில் உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் பி.கே.கைலாஷ்குமாா் தலைமையில் அலுவலா்கள் பெ.நல்லதம்பி, சுந்தரமூா்த்தி, சுப்பிரமணியன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை சோதனையிட்டனா். அப்போது அந்தக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. அங்கிருந்து 75 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனா். மேலும், அதே கடையில் 20 கிலோ கலப்பட டீத்தூளையும் பறிமுதல் செய்தனா். இதையடுத்து, அந்த மளிகைக் கடைக்கு ‘சீல்’ வைத்தனா். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், கலப்பட டீத்தூள் மதிப்பு சுமாா் ரூ.1.20 லட்சம் எனக் கூறப்படுகிறது.
ஆய்வின்போது திட்டக்குடி காவல் ஆய்வாளா் அன்னக்கொடி, உதவி ஆய்வாளா் சந்துரு மற்றும் போலீஸாா் உடனிருந்தனா்.