Read Time:3 Minute, 45 Second
உணவே மருந்து:அற்புத மருத்துவ பயன்களை அள்ளித்தரும் எலுமிச்சை சாறு !
எலுமிச்சை பழத்தில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அதனால் தான் எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனைக்கு இயற்கை வழியை நாடும் போதும் அதில் நிச்சயம் எலுமிச்சை முக்கிய பங்கு வகிக்கிறது. அந்தவகையில் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்போம்
செரிமானத்திற்கு உதவும் பித்தநீரை சுரக்க எலுமிச்சை (Lemon) உதவுகிறது. இதில் கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் (Vitamins) அதிகம் இருப்பதால், அவை செரிமான பாதையில் உள்ள டாக்ஸின்களை எளிதில் வெளியேற்றும். காலையில் வெதுவெதுப்பான நீரில் செய்யப்பட்ட எலுமிச்சை சாறு குடிப்பதால் குடலியக்கம் சீராக இருக்கும்.
- ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறினை பிழிந்து, அதில் தேன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும். இதனால் எலுமிச்சையில் உள்ள பெக்டின் என்னும் நார்ச்சத்து நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும். மேலும் இதனால் கிடுகிடுவென உடல் எடை குறையும்.
- எலுமிச்சையானது இரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு மட்டுமின்றி, புதிய இரத்த செல்களின் உற்பத்திக்கும் உதவியாக உள்ளன. அதிலும் இந்த சாறிவில் தேன் சேர்த்து குடிப்பதால், அவை கொலாஜனை ஊக்குவித்து, சருமத்தை சுத்தமாகவும், பொலிவோடும் வைத்துக் கொள்ள உதவுகிறது.
- எலுமிச்சைச் சாற்றை முகத்தில் தடவிவர, முகத்திலுள்ள கரும்புள்ளிகளும் சுருக்கங்களும் மறையும். எலுமிச்சைச் சாற்றுடன் சிறிது பால் ஏடு கலந்து முகத்தில் தடவினால் முகம் பளிச்சிடும்.
- தினமும் காலையில் வெறும் வயிற்றில் இளஞ்சூடான நீரில் எலுமிச்சைச் சாற்றுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகிவர உடல் எடை குறையும். இதையே இரவில் குடித்து வந்தால் நல்ல தூக்கம் வரும். மனம் அமைதி அடையும்.
- தலையில் சிறிது எலுமிச்சைச் சாற்றைத் தடவி, சிறிது நேரம் ஊறவைத்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும். பித்தம், உடல் சூடு அடங்கும்.
- எலுமிச்சைச் சாற்றுடன் தேன் கலந்து குடித்துவந்தால் வறட்டு இருமல் தீரும். மருதாணியை அரைத்து எலுமிச்சைச் சாற்றில் கலந்து பாதத்தில் தடவிவந்தால் பாத எரிச்சல் குணமாகும்.
- எலுமிச்சம் பழத்தில் வைட்டமின் சி இருக்கிறது. எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம், கிருமிகளை அழிக்கும்.