0 0
Read Time:3 Minute, 29 Second

ஸ்ரீமுஷ்ணம் அருகே பெயிண்டர் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஸ்ரீமுஷ்ணம் அருகே கானூர் ஆர்.சி.தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவரது மகன் குணராஜ் (வயது 32). பெயிண்டர். இவர் கடந்த 8-ந்தேதி இரவு தனது வீட்டில் சாப்பிட்டு முடித்த பின்னர், அருகே உள்ள அமலநாதன் என்பவரது வீட்டிற்கு சென்றார். 

அங்குள்ள இருபக்க கதவுகளையும் உள்பக்கமாக பூட்டிக்கொண்டு தனியாக தூங்கியதாக கூறப்படுகிறது. திடீரென்று நள்ளிரவில் குணராஜியின் அலறல் சத்தம் கேட்டது. இதைகேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு குணராஜ் பின் தலையில் அடிபட்டு ரத்தக்காயங்களுடன் கிடந்தார். 

இதையடுத்து, அவரை மீட்டு பாளையங்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குணராஜ், கடந்த 16-ந்தேதி  சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக அவரது தந்தை ஆரோக்கியசாமி ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் செய்தார். அதன்                பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே குணராஜ் சாவில் மர்மம் இருப்பதாகவும், கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்திட வேண்டும் என்று கூறி, நேற்று காலை அவரது உறவினர்கள் ஸ்ரீமுஷ்ணம்-சேத்தியாத்தோப்பு மெயின்ரோட்டில் கானூரில்  திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். 

தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், மணிவண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
அப்போது, குணராஜியின்  பிரேத பரிசோதனை முடிவு அறிக்கையை பெற்று, அதனடிப்படையில் வழக்கு விசாரணை மேற்கொள்வதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %