0 0
Read Time:3 Minute, 18 Second

இரண்டு உதவி கோட்டப் பொறியாளர்கள்மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் பல லட்ச ரூபாய் மோசடிப் புகார் காரணமாக, விசாரணை அடிப்படையில் ஒன்றிய ஆணையர், பொறியாளர்கள் உள்ளிட்ட ஏழு பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த ஜூன் மாதம் 28 -ம் தேதி ஒன்றியக்குழுத் தலைவர் காமாட்சி மூர்த்தி தலைமையில் ஒன்றியக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், “ஊராட்சி ஒன்றிய நிதியின்கீழ் நடைபெற்ற பல்வேறு பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகப் புகார் எழுந்தது. சாலை உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி வளர்ச்சிப் பணிகளைச் செய்யாமலேயே கணக்கு காட்டப்பட்டுள்ளது. மேலும் ஒரே பணியை இரண்டு பெயரில் பில் போட்டு மோசடி செய்ததாகவும், இதனால் 1.38 கோடி ரூபாய் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது’’ எனத் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற ஆதாரத்துடன் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து சென்னை கண்காணிப்பு பொறியாளர் சரவணகுமார், திருவாரூர் மகளிர் திட்ட இயக்கநர் ஸ்ரீலேகா இருவரும் இரண்டு நாள்கள் விசாரணை மேற்கொண்டு, கணக்கு வழக்குகளை ஆய்வு செய்ததில் 25,82,606 ரூபாய் மோசடி நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஊரக வளர்ச்சித்துறை முறைகேடு குறித்து ஒன்பது பேர் மீது நடவடிக்கையெடுக்க மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரைத்தனர். அதையடுத்து விசாரணை அறிக்கை அடிப்படையில் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட மாதங்களில் பணியிலிருந்த ஒன்றிய ஆணையர் சரவணன், ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியாளர்கள் கிருஷ்ணகுமார்,

தெய்வானை, பூரணச்சந்திரன், ஒன்றியப் பணி மேற்பார்வையாளர்கள் அன்பழகன், அகிலா, ராஜ்குமார் ஆகியோரை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இரண்டு உதவி கோட்டப் பொறியாளர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார். இந்தச் சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %