0 0
Read Time:3 Minute, 9 Second

நாகை, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் உள்ள 64 மீனவ கிராமங்களில் சுருக்குமடி வலை காரணமாக நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்களுக்கு இடையேயான பிரச்னைகள் நீடித்துக் கொண்டிருக்கின்றன. சுருக்குமடி வலையை அனுமதிக்கக்கூடாது என்றும், அனுமதிக்க வேண்டும் என்றும் தரங்கம்பாடி முதல் பழையாறு வரையிலான 20 கிராம மீனவர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர்.

மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்டத்தில், சுருக்குமடி வலைக்கு அனுமதி கேட்டு பூம்புகார், திருமுல்லைவாசல், மடவாமேடு, சந்திரபாடி உள்ளிட்ட மீனவர்கள் கடந்த மாதம் போராட்டம் நடத்தினர். தடை செய்யப்பட்ட சுருக்குமடியை அனுமதிக்க முடியாது எனவும் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983 ல் உள்ள 21 சட்டங்கள் அமல்படுத்தபடுவதாகவும் மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவித்தார்.

அதன் பின்னர் மீன்வளத் துறை முறையாக எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சுருக்குமடி வலை மீனவர்கள் தடையை மீறி கடந்த 14 ஆம் தேதி மீன்பிடிக்க முயன்றனர். அதனை எதிர்த்து கடலில் படகுகளுடன் நாட்டுப்படகு மீனவர்கள் குவிந்தநிலையில், இருதரப்புக்குமான மோதலில் ஒரு படகு உடைந்து 3 மீனவர்கள் காயம் அடைந்தனர். 4 படகுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சுருக்குமடி மற்றும் அதிவேக என்ஜின்களை அகற்றும் வரை காலவரம்பற்ற போராட்டத்தில் 20 கிராம மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதேநேரத்தில், சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்கும் 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த 8 ஆயிரம் மீனவ குடும்பங்கள், சுருக்குமடியை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

சுருக்குமடி வலையைத் தொடர்ந்து பயன்படுத்தி வரும் நாகை மாவட்ட மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் மாவட்ட மீனவர்கள் மனு அளித்துள்ளனர். உடனடியாக மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், நாகை மாவட்ட நிர்வாகத்துடன் பேசி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் மீனவர்கள் கேட்டுக் கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %